30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தெளிவான அறிவுறுத்தல் கிடைத்தால் 18 வயதினர் வாக்களிப்பதை செயல்படுத்த முடியும்!

🔥 Views : 7
👁 Reading Now : 66

வரும் பொதுத் தேர்தலில் 18 வயதினர் வாக்களிக்கும் உரிமை நிலைநாட்டுவதில் தெளிவான அறிவுறுத்தல் கிடைத்தால் அதனை செயல்படுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 18 வயதினர் வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்த தொழில்நுட்பக் காரணங்கள், சட்டத் தடைகள் எனப் பலவற்றைக் கூறி அரசாங்கம் சாக்குப்போக்கு கூற முயல்கிறது என்றார். நான் முன்பு பிரதமரைச் சந்தித்தபோது 18 வயதினர் வாக்களிக்கும் உரிமை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன், இதற்கு அடுத்த பொதுத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றேன் தேர்தல் ஆணையத்திற்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் கிடைத்தால், அவர்களால் அதை நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 வயதாகக் குறைக்க, அரசுக்கு உத்தரவிட்ட கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் முடிவை அடுத்து, உடனடியாக அதனைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை டத்தோஸ்ரீ அன்வார் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles