29.3 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

கல்வி அமைச்சு பள்ளிகளை திறப்பதில் அவசாரம் காட்ட வேண்டாம்

🔥 Views : 7
👁 Reading Now : 40

அக்டோபர் 3 தேதி நாட்டில் உள்ள பள்ளிகளை திறப்பதற்கான முடிவில் அரசங்கம் அவாசரம் கட்ட வேண்டாம் என ஜொகூர் ஜசெக சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்டோபர் 3-இல் பள்ளிகூடங்கள் முதல்,இரண்டாம்,மூன்றாம் கட்ட என நோய் கட்டுபாட்டின் அடிபடையில் திறக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ள கல்வி அமைச்சின் திட்டம் இன்றைய நோய் கால கட்டத்தில் ஏற்புடையதாக இல்லை. நாடு நோய் தடுப்பில் இருந்து இன்னும் முழுமை அடையாத இந்த காலகட்டத்தில் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் இன்னும் பய உணர்வில் இருந்து மீளாத சூழ்நிலையில் கல்வி அமைச்சு பள்ளிகூடங்களைத் திறக்க எடுத்த முடிவு பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்த முடிவு பெற்றோர்,மாணவர் மற்றும் கல்வி போதிக்கும் ஆசிரியர்களிடமும் மனசஞ்சலத்தை ஏற்படுத்திவிடும் எனவே நோய் தொற்று ஒரு கட்டுப்பாட்டிற்கு வரும் வரை பள்ளிகூடங்களை திறக்காமல் இருப்பதே சிறப்பு,அத்தோடு மற்றுமொரு நோய் தொற்றை (cluster) நாமே வழி வகுக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles