33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நோய்த்தொற்று அபாயம் உள்ளவர்கள் தடுப்பூசியை விரைந்து பெறுங்கள்!

இன்னும் தடுப்பூசி பெறாமலிருக்கும் நோய்த் தொற்றுக்கான சாத்தியம் அதிகம் உள்ள தரப்பினர் தடுப்பூசி பெறுவதற்காக சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தில் விரைந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு பதிந்து கொண்டவர்கள் விரைந்து தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக அவர்களை தமது தரப்பு தொடர்புக் கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா கூறினார். வயது மூட்டு காரணமாக படுக்கையில் இருப்பவர்கள், தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாத நிலையில் இருப்போர் மற்றும் இன்னும் தடுப்பூசி பெறாதிருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சுற்றத்தார் குறித்த தகவல்களை selvaxmobile என்ற அகப்பக்கத்தில் பதிவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இத்திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 011-5755 1754 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles