26.4 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

பொருளாதார சிறப்பு ஆலோசகராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நியமிக்கப்படுகிறார்

🔥 Views : 6
👁 Reading Now : 41

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தில் பொருளாதார சிறப்பு ஆலோசகராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம் உறுதி என்று வட்டாரங்கள் கோடி காட்டுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரை அவரது அலுவலகத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு இந்த பதவி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாரம் கூறுகிறது. டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு பொறுப்புக்கள் என்ன என்பதை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. எஸ்ஆர்சி மற்றும் 1எம்டிபிக்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ஊழல் வழக்கில் நஜிப் ஒரு குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அவர் பொருளாதார சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டால் பெர்சத்து – அம்னோ இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles