30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

செப்.16லிருந்து லங்காவிக்கு சுற்றுப்பயணிகள் வரவேற்கப்படுகின்றனர்!

தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்ட மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் உள்நாட்டுச் சுற்றுப்பயணிகள் வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி லங்காவிக்கு வரவேற்கப்படுவதாகச் சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர், டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார். இந்த அனுமதி 2 மருந்தளவுத் தடுப்பூசிகளைச் செலுத்தி விட்டப் பெரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் வர வேண்டும். இதில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles