30 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

தமிழ்நாட்டில் சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்

🔥 Views : 18
👁 Reading Now : 70

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் நாட்டில் பொது இடங்களில் பெரிய சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் சிலைகள் தயாரிக்கும் பணி முடங்கி இருந்தது. இம்முறை பெரிய சிலைகள் விற்பனைக்கு வரவில்லை. அதே நேரத்தில் வண்ண மயமான சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம் என்று கடைக்காரர்கள் கூறுகிறார்கள். சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும், சாலை ஓரங்களிலும், வணிக பகுதிகளிலும் சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனை மக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வந்து அதிக ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறிய விநாயகர் சிலைகள் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles