
முஸ்லிம் அல்லாதோரின் மதக் கட்டுப்பாட்டு சட்டம் சட்ட உரிமையை மீறும் செயல் என்று செலாயாங் கவுன்சிலர் ஏண்டி முனியாண்டி தெரிவித்தார். முஸ்லீம் அல்லாதோர் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர்துறை இலாகா சமயப்பிரிவு துணையமைச்சர் அக்மாட் மார்ஜூக் ஷாரி கூறியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அரசியல் ஆய்வாளர்களும் தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த மலேசிய குடும்பம் கொள்கைக்கு எதிரானது என்று அவர் சொன்னார். நல்லிணக்கத்தோடு வாழும் மலேசிய மக்களிடையே அச்ச உணர்வை இது ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் ம இகாவின் இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் பெர்சத்து கட்சியில் இடம் பெற்றிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் தங்களது நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதில் இனியும் மௌனம் காப்பது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
