28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பாலிங் மாவட்டத்தில் 50 வறிய குடும்பத்தினருக்குப் 6 மாதங்களுக்கு உதவி பொருள்கள்

பரிவுமிக்க கரங்கள் உதவித்திட்டத்தின் கீழ் நன்கொடையாளர்களின் உதவியுடன் பாலிங் மாவட்டத்தில் வறிய நிலையில் வசிக்கக்கூடிய 50 குடும்பத்தினருக்கு இவ்வுதவி வழங்கப்படுவதாக பாலிங் சமூக சேவகர் செகு இராமசாமி கூறினார். இத்திட்டம் பாலிங் தொகுதி இளைஞர் தலைவர் ஆசிரியர் மகேந்திர ராவ் மற்றும் இளைஞர் பகுதியினரின் மிகச் சிறந்த நடவடிக்கையென செகு இராமசாமி பாராட்டினார். இத்திட்டத்தின் வழி மாதத்திற்கு 80 வெள்ளியில் குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை 6 மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட ஒரு கடையில் இருந்து வாங்கும் திட்டமென்று செகு.இராமசாமி குறிப்பிட்டார். தற்போது நோய்த்தொற்று காரணமாக மேலும் சுமையை எதிர்நோக்கும் இந்த 50 குடும்பத்தினருக்கு இத்திட்டம் பேருதவியாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மகேந்திர ராவ் தெரிவித்தார். இத்திட்டம் வெற்றியடைய பல்வேறு உதவிகளை வழங்கிய பாலிங் மாவட்ட மன்ற உறுப்பினர் டேவிட், ஆசிரியர் விஜயராஜ், ஆசிரியர் பாஸ்கர், தர்மராஜ், வெங்கடேஸ், கிருஷ்ணா, சதிஸ் ராவ் மற்றும் இளைஞர்களுக்கு செகு இராமசாமி மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles