29.9 C
Kuala Lumpur
Tuesday, July 7, 2026

Vetri

கோலலிப்பிஸ் செல்போர்ன் தோட்டப் பாட்டாளிகளுக்கு பொருள் உதவிகள் விரைந்தன

🔥 Views : 9
👁 Reading Now : 37

நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கோலலிப்பிஸ் செல்போர்ன் தோட்டப் பாட்டாளிகளுக்கு தொடர்ந்து பொருள் உதவிகள் விரைந்த வண்ணம் உள்ளன. இந்த தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அண்மையில் நோய்த்தொற்றை தாக்கம் ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். தோட்டப் பாட்டாளிகளுக்கு உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது. மேலும் சமூக சேவையாளர் சங்கர் ஸ்ரீராம் முயற்சியால் கோலலிப்பிஸ் பாடாங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்தாபா மூலம் தோட்டப் பாட்டாளிகளுக்கு போதுமான உதவிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. கோலலிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நூர் இந்த மாவட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை யும் சிறப்பான முறையில் கண்காணித்து வருகிறார். செல்பேர்ன் தோட்டப் பாட்டாளிகள் பிரச்சினைக்கு தீர்வு காண இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles