
ஈப்போ – லங்காவிக்கு இடையிலான ஏர் ஆசியா விமானச் சேவை அடுத்த வாரம் மீண்டும் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வாரத்திற்கு மூன்று முறை என இருவழிப் பயணமாக அது அமையும்.முதல் விமானப் பயணம் செப்டம்பர் 17 – ஆம் தேதியும்,மேலும் இரண்டு பயணங்கள் செப்டம்பர் 19 மற்றும் 22 -ஆம் தேதியும் தொடங்கும் என ஏர் ஆசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .முதல் பயணம் செப்டம்பர் 17 -ஆம் தேதி பயணிகள் ஏர்பஸ் A 320 விமானம் மூலம் பிற்பகல் 1 .40 மணிக்கு ஈப்போவிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2 .30 மணிக்கு லங்காவி அனைத்துலக விமான நிலையம் வந்தடையும் என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது. கோவிட் -19 தொற்றின் தாக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லங்காவிக்கான சுற்றுலாவுக்கு செப்டம்பர் 16 -ஆம் தேதி முதல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
