
நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பதிவுச் செய்யப்பட்ட 393 மரணச் சம்பவங்களைக் காட்டிலும் நேற்று 592 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டது குறித்து ஜ.செ.க. மூத்தத் தலைவர், லிம் கிட் சியாங் கடுமையாகச் சாடினார். இருந்த போதிலும் மரணச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆகும். இதில் எஞ்சியவை தரவு நிலுவையால் ஏற்பட்ட அதிகரிப்பாகும் என்று சுகாதார அமைச்சு கூறியது. அண்மையில் பதிவுச் செய்யப்பட்ட 20,419 மரணச் சம்பவங்கள் தொடக்கநிலை மதிப்பு 20,000யும் தாண்டி விட்டது கோவிட்நாவ் அதிகாராப்பூர்வ இணையத் தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாகப் பத்திரிகையாளர்களிடம் லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
