34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பக்காத்தான் கூட்டணி தலைவர் மன்ற ஒருங்கிணைப்பாளராக அந்தோணி லோக் நியமனம்

🔥 Views : 8
👁 Reading Now : 53

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர் மன்ற ஒருங்கிணைப்பாளராக சுங்கைப் பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரிக்கு பதிலாக ஜ.செ.க. செயலாளர், அந்தோணி லோக்கை பக்கத்தான் தலைவர் மன்றம் நியமித்தது. இதில் பி.கே.ஆர். தலைமைச் செயலாளர், டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனை தலைமைச் செயலாளராக அக்கூட்டணி நியமித்துள்ளது. ஜ.செ.க. இளைஞர் பிரிவுத் தலைவர், ஹாவார்ட் லீ சுவான் ஹவ் பக்கத்தானின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் ஐமான் அதிரா மகளிர் பிரிவுத் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் அமானா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சாலாஹுடின் அயூப் பக்காத்தானின் வியூகத் தலைவராகவும் பி.கே.ஆர். தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் தொடர்புப் பிரிவு இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles