28.4 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

18 ஆண்டுகளாக அர்ச்சகராக பணியாற்றி சுய பணி ஓய்வில் தமிழகம் திரும்பும் ஐயா முருகன் முத்தையாவுக்கு பாராட்டு விழா

🔥 Views : 43
👁 Reading Now : 21

கோல கெட்டில் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில் மிகக் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிய ஐயா முருகன் தமிழகத்தில் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். பாலிங் வட்டார மக்களின் அணுக்கமான தொடர்ப்பை ஏற்படுத்தி திருமணம், கருமக்கிரிகை, புதுமனை புகுவிழா போன்ற ஆகம விருத்தி நடவடிக்கைகளின் வழி அனைவரின் அன்பையும் நல்லிணக்கத்தையும் பெற்று நட்புறவோடு சேவையாற்றியதாக ஆலயத் தலைவர் பா.டேவிட் தெரிவித்தார். இந்நிகழ்வில் அர்ச்சகர் முருகனின் உயர்வான சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு செய்து சன்மானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் செகு இராமசாமி முன்னாள் ஆலய செயலாளர், சிவா பொருளாளர், தேவராஜ், வெங்கடேஸ் உட்பட ஆலய செயலவை உறுப்பினர்கள் கலந்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles