34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் டிங்கியை ஒழியுங்கள்!

🔥 Views : 5
👁 Reading Now : 32

நோய்த்தொற்று தாக்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் தற்போது டிங்கி நோய் தாக்கமும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ரவாங் வட்டாரத்தில் பல குடியிருப்பு பகுதிகளில் டிங்கி நோய் அபயம் தென்படத் தொடங்கியுள்ளன. இதனை முன்னிட்டு நேற்று ரவாங் கோலா காரிங் மற்றும் பெலாங்கி பகுதி பகுதியில் டிங்கி ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. செலாயாங் கவுன்சிலர் ஏண்டி என்ற அண் முனியாண்டி ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியை செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங் மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். மேலும் டிங்கி கொசுக்களை ஒழிப்போம் என்று அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர். வீடுகளில் டிங்கி கொசுக்களை ஒலிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கொசு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன என்று கவுன்சிலர் ஏண்டி முனியாண்டி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles