
வரும் வியாழக்கிழமை முதல் நாட்டின் இரு பெரிய திரையரங்குகளான GSC, TGV ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. GSC முதல் கட்டமாக வரும் வியாழக்கிழமை 17 திரையரங்குகளை திறக்கும் வேளையில் செப்டம்பர் 23 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக அதன் எஞ்சிய திரையரங்குகளை திறக்கும். இவ்வேளையில் TGV, செப்டம்பர் 23 ஆம் தேதியே அதன் அனைத்து திரையரங்குகளையும் திறக்க திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
