26.6 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

வெ.184,335 மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியது; 7 பேர் கைது

🔥 Views : 30
👁 Reading Now : 29

போதைப் பொருளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 335 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.
கடந்த வெள்ளிகிழக்கிமை இரவு 7.30 மணியளவில் தென் செபராங் பிறை,சிம்பாங் அம்பாட் புக்கிட் தம்புனில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 39 மற்றும் 51 வயதிலான இருவரை கைது செய்து,13 .6 கிலோகிராம் ஹீரோயின் மற்றும் 7 கிலோகிராம் கெபின் வகை போதைப் பொருட்களை கைப்பற்றினர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொடர்பில் இங்கு தாமான் மெராக் குடியிருப்பில் தரை வீடு ஒன்றிலும் சிம்பாங் அம்பாட்டில் சமையல் எரிவாயு கடை ஒன்றையும் சோதனையிட்டனர்.
மேலும் இந்த நடவடிக்கையில் பிஎம் டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ்,நிசான் சென்டரா,பெரோடுவா மைவி,புரோட்டோன் பெர்சோனா,தங்க நகைகள்,வங்கி சேமிப்பிலிருந்து 266,000 வெள்ளியையும் பறிமுதல் செய்தனர்.
இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 34 வயது முக்கிய புள்ளி உட்பட 24 வயதிலிருந்து 51 வயதுக்குட்பட்ட எழுவரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக பினாங்கு மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் முஸ்தபா கமால் கனி அப்துல்லா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles