31.7 C
Kuala Lumpur
Tuesday, July 7, 2026

Vetri

கோடிக்கணக்கான கடன் ரினா ஹருண் செலுத்தியதில் லஞ்ச அம்சங்கள் இல்லை

🔥 Views : 12
👁 Reading Now : 53
SEPANG, 8 Sept — Menteri Pembangunan Wanita, Keluarga dan Masyarakat Datuk Seri Rina Mohd Harun ketika sidang media selepas menyampaikan Sumbangan dan Bakul Prihatin Negara di Sungai Pelek hari ini. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA

பிரான்ஸ் பாரிஸ் நகரை தலமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கானத் தொகையை மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ ரீனா ஹருண் செலுத்தியதில் லஞ்ச ஊழல் ஏதுமில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
முன்னதாக இக்கடன் தொகையைச் செலுத்துவது தொடர்பான மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணையில் தற்போதைய நிலை குறித்த சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர், ஹான்னா இயோவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமான முறையில் இஸ்மாயில் சப்ரி பதிலளித்தார்.
அமைச்சர் ரீனா ஹரூண் எவ்வாறு அவ்வளவு பெரிய கடனை குறுகிய காலத்தில் செலுத்த முடிந்தது என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று 5 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூலை மாதத்தில் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles