26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு… செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்

🔥 Views : 34
👁 Reading Now : 41

நார்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த வகை தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கிலம் மற்றும் டால்பின்களை வேட்டையாடுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடல்நீர் செந்நிறமாக காட்சியளிக்கும். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த கொடூரமான வேட்டை தொடர்கிறது. அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றனர் பாரோ தீவின் வேட்டைக்காரர்கள். இந்த வேட்டையின்போது ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளன. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles