32.5 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

சஞ்சீவனின் ‘டத்தோ’ பட்டத்தை பகாங் மீட்டுக் கொண்டது!

🔥 Views : 33
👁 Reading Now : 45

‘மை வாட்ச்’ இயக்கத் தலைவர், ஆர்.சஞ்சீவனுக்கு வழங்கப்பட்ட ‘டத்தோ’ விருதை பகாங் மாநில அரசு ரத்துச் செய்து மீட்டுக் கொள்வதாக அதன் செயலாளர், டத்தோஸ்ரீ டாக்டர் சாலேஹுடின் இஷாக் தெரிவித்தார். பகாங் மாநிலத்தின் மரியாதைக்குரிய இண்ட்ரா மாகோத்தா விருதை மீட்டுக் கொள்வதற்கானக் கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விருதை மீட்கும் நடவடிக்கை உண்மையில் பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரிஆயாதுடின் அல்-முஸ்தபா பில்லா அவர்களின் உத்தரவுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் தமக்கு அளிக்கப்பட்ட விருதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது, மாறாக அதை பகாங் மாநில விருதுகள் சட்டத்திற்கேற்ப மாநில அரசுச் செயலாளர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles