34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பினாங்கில் கள மருத்துவமனை நிர்மாணிப்புப் பணிகள் விரைவில் நிறைவுபெறும்!

பினாங்கு மாநிலத்தில் கோவிட் -19 தொற்றிற்கான சிகிச்சை வசதியை மேம்படுத்த கள மருத்துவமனையின் நிர்மாணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது .பினாங்கு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சையின் வசதியை மேம்படுத்த மலேசிய இராணுவப் படையின் உதவியுடன் இந்த சிறப்பு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக இராணுவப் படையின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஸம்ரி கூறினார். பினாங்கு மருத்துவமனையின் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த கள மருத்துவமனையின் பணிகள் இன்னும் 10 நாட்களில் நிறைவுப் பெற்று. அடுத்த வியாழக்கிழமை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தீவிர சிகிச்சைக்கு 4 படுக்கைகளும்,96 வாட் படுக்கைகள் என மொத்தம்100 படுக்கைகள் இருக்கும். மாநிலத்தில் கோவிட் – 19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கள மருத்துவமனை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சர் டத்தோ கைரி ஜாமாலுடின் கூறியிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles