25.3 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

நாட்டில் அதிகரித்து வரும் மணமுறிவு சம்பவங்கள் கவலையளிக்கிறது!

நாட்டில் கோவிட் -19 தோற்று சம்பவம் தொடங்கிய கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி இவ்வாண்டு ஆகஸ்டு வரையில் மொத்தம் 78 ,000 விவாகரத்து சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி நேற்று வெளியிட்டுள்ள தகவல் மிகுந்த கவலையளிப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். கடந்த 18 மாதங்களில் தினசரி 117 விவாகரத்து சம்பவங்கள் நடைபெறுகிறது. அறிவார்ந்த சமூகமாக மாறிவரும் மலேசியாவிற்கு இதுவொரு மிகப் பெரிய பின்னடைவாகும். இதன் மொத்த 78 ,000 சம்பவங்களில் 10 ,346 சம்பவங்கள் முஸ்லீம் அல்லாதவர்களிடையே நிகழ்ந்துள்ளது.தினமும் 23 விவாகரத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்றார். இந்தியத் தம்பதிகளிடையே மணமுறிவு சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்த அவர், இனியும் கோவிட் – 19 காலத்தில் பொருளாதாரம்,மன உளைச்சல் ஆகியவற்றை ஒரு காரணமாக வைத்து குடும்ப வாழக்கையை சீரழித்துக் கொள்ள வேண்டாமென மலேசியர்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles