28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

லங்காவிக்கு செல்வதற்கு முன் கட்டாய மருத்துவப் பரிசோதனை!

🔥 Views : 7
👁 Reading Now : 41

லங்காவிக்குச் சுற்றுலா செல்லவிருக்கும் ஒவ்வொரு சுற்றுப்பயணிக்கும் கோவிட் தொற்றைக் கண்டுபிடிக்கும் சோதனை மேற்கொள்வதைக் கட்டாயமாக்கிய அரசு முடிவு தாமதமாக அறிவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அது சரியான அணுகுமுறையாகும் என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார். இம்முடிவு எடுக்கப்பட்டதற்கானக் காரணம் சுற்றுலா மேற்கொள்வதற்கானத் தொடக்கக்கட்ட நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டதும் கோவிட் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அச்சப்படுவதே ஆகும். மருத்துவப் பரிசோதனை இல்லை என்று இதற்கு முன் நான் கூறியிருந்தேன். எனினும், அப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகச் சுகாதார அமைச்சு கூறியது. இதில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்புக் குறித்து சுகாதார அமைச்சும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் அச்சம் கொண்டுள்ளன. இது அமைச்சின் சார்பில் ஒரு நேர்மறையான ஒரு வருத்தமாகும். இது உண்மையில் நல்ல நோக்கமாகக் கருதப்படுவதால் நாங்களும் அதை ஆதரித்து வரவேற்போம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles