26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

துணை சபாநாயகர் பதவிக்கு டத்தோ அமாட் மஸ்லானுக்கு பெர்சத்து எம்பிக்கள் ஆதரவு தரவில்லை!

மக்களவைத் துணைச் சபாநாயகர் பதவிக்கு பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அகமட் மஸ்லானுக்கு பெர்சத்து எம்பிக்கள் ஆதரவு தரவில்லை என்பது உண்மை என்று கூறப்படுகிறது. பெர்சத்து மற்றும் 4 சுயேட்சை எம்பிக்கள் ஆதரவு தரவில்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி நேற்று தெரிவித்தார். டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதிவுக்கு டத்தோ அமாட் மஸ்லான் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அமாட் மஸ்லானுக்கு பெர்சத்து எம்பிக்கள் ஆதரவு தரவில்லை என்று பெர்சத்து கட்சி எம்பி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டில் பெர்சத்து உறுதியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles