
கோவிட் தொற்றினால் கடந்த புதன்கிழமையில் 422 பேர் மரணமுற்றதைத் தொடர்ந்து மரணமுற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 22,009ஆகப் பதிவுச் செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது 3ஆவது முறையாக மிகவும் உயர்வாகப் பதிவு செய்யப்பட்ட மரண எண்ணிக்கை ஆகும். நேற்று 92 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கு முன்பே மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
