34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலே கில்லாடிகள் இருவர் பலி

🔥 Views : 5
👁 Reading Now : 40

பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என நம்பப்படும் இரு அந்நிய நாட்டு ஆடவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புக்கிட் மெர்தாஜாம் குபாங் செமாங்,புக்கிட் மெங்குவாங் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது,புரோட்டோன் வாஜா ரக காரில் வந்த இருவர்,ஜாலான் பெனாந்தியின் போலீசாரை சாலை தடுப்பில் நிற்காமல் வேகமாக சென்றக் காரை போலீசார் துரத்திச் சென்று மடக்கியதாக பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுஹாய்லி முகமட் ஸைன் கூறினார். காரிலிருந்து இறங்கிய அவர்கள் போலீசாரை நோக்கி சுட்டபோது,போலீசார் அவர்களை சுட்டதாக சொன்னார்.அவர்களின் காரிலிருந்து ஒரு துப்பாக்கி,ஒரு பாரங்கத்தி ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் கூறிய அவர்,பல்வேறு குற்றச்செயல்களுக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் என அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles