27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இந்தியர்களுக்கு எதிராக கல்வி முறையில் அதிக பாகுபாடுகள்! Sekolah semua இளைஞர் அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 42

மலேசிய இந்தியர்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற முறையில் பள்ளிகளில் தங்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக 10 இந்தியர்களில் 9 பேர் குறிப்பிட்டிருப்பது கல்வி நடைமுறை மீது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று sekolah semua இளைஞர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்களின் நிறம் காரணமாக புறக்கணிக்கப்பட்டதாக 69 பேரும் , தங்களது சமய வேறுபாடு காரணமாக புறக்கணிக்கப்பட்டதாக 65 விழுக்காடு பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். 2,441 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தாங்கள் தொல்லை மற்றும் கிண்டலுக்கு ஆளானதாகவும் கல்வி முறையில் அரசாங்க கொள்கைகளினால் அதிக பாராபட்சத்துடன் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். புதிய பிரதமர் அறிவித்துள்ள “மலேசிய குடும்பம்” என்ற சுலோகத்திற்கு முற்றிலும் எதிராக இது உள்ளதாக கூறப்படுகிறது. கல்வித்துறையில் பாகுபாடு பிரச்சினைகளை களைய கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles