
நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானம் இழந்த கஷ்டப்படும் மக்களுக்கு உதவ தங்களது சொந்த பணத்தை பயன்படுத்தும்படி பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதிகளை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் மானியத்தை நம்பியிருக்காமல் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த பணத்தில் மக்களுக்கு உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார். பெடுலி நாடி ராக்யாட் உதவித் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தத் திட்டத்தின் கீழ் 10, 000 பேருக்கு உணவு கூடைகள் வழங்கப்படும் என்றார்.



