28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கான அனைத்துலக பயண பாஸை எளிதாக்குவீர்!

🔥 Views : 7
👁 Reading Now : 31

கடல் தாண்டிப் பிரிந்திருக்கும் தம்பதிகளின் அனைத்துலகப் பயண பாஸ் அங்கீகரிப்பை அரசு எளிதாக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியாவுக்குள் நுழைந்து வெளியேறும் பயணங்களுக்கான பாஸைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து எனக்குப் புகார்கள் கிடைத்துள்ளது. அதனால் இவ்விவகாரம் குறித்து உளதுறை அமைச்சர், வெளியுரவு அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு நான் அதிகாரப்பூர்வக் கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன். இதில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டதற்குக் காரணம் அனைத்துலக எல்லைப் பகுதிகளைக் கடந்து செல்ல தடை ஏற்படுத்தியதுதான். நீண்ட நாட்களாக மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க முடியாமல் இருக்கும் தம்பதியர்களுக்கு இந்த அனைத்துலக பாஸை எளிதாக்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles