
பொழுது போக்கு மையங்களுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்காவிட்டால் அம்மையங்களிலிருந்து வெளியேறும்படி அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. வருகையாளர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதையும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதையும் உறுதி செய்ய மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு மையங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி போலீசார் பணிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோ மாஸ்தோர் முகமது அரிப் கூறினார்.



