
நோய்த் தொற்று காரணமாக மக்கள் தற்போது கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோழியின் விலையை உயர்த்துவதை நிறுத்தும்படி உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழி விலை உயர்வு காணாமலிருபப்பதை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தொடந்து மேற்கொள்ளும் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது ஜவாவி அப்துல் முக்னி கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் தாம் மாநில பயனீட்டாளர் விவகார துறை இயக்குநரை சந்தித்ததாகவும் அவர் சொன்னார்.



