26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறப்போகும் இடைவெளியில்லாத 14 மணிநேர கணித பட்டறை

🔥 Views : 7
👁 Reading Now : 43

E-Tuisyen Arena Matriks ஏற்பாட்டில் இணையம் வழி இடைவெளி இல்லாத 14 மணி கணித பட்டறை வரும் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் நடைபெறும் இந்த 14 மணி நேர கணித பட்டறையில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள் என்று ஆசிரியர் ஜனகன் ஆறுமுகம் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். படிவம் 1 முதல் படிவம் 5 வரைக்குமான இந்திய மாணவர்கள் இதில் இலவசமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. கணிதப் பாடத்தில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்குவதற்காக இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கணித பட்டறையில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 010 255 1434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles