25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலாக்கா எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 சலுகைகள்!

🔥 Views : 6
👁 Reading Now : 44

அரசியல் நிலைத்தன்மை, கோவிட் தொற்று முறியடிப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு வழி வகுக்கும் பொருட்டு எதிர்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மலாக்கா மாநில அரசு 5 சலுகைகள் வழங்குவதாக முதல்வர், டத்தோஸ்ரீ உத்தாமா சுலைமான் மாட் அலி தெரிவித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த மலேசியக் குடும்பக் கோட்பாட்டுக்கு ஈடானது. இதில் நாடாளுமன்ற உருமாற்றம் மற்றும் எதிர்கட்சியினருடன் ஒத்துழைப்பு உட்பட சில அம்சங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அந்த ஒத்துழைப்பு மலாக்கா மாநில மக்களின் நிலைத்தன்மை, சமூகநலனுக்காக வாழ்க்கைப் பின்னணி, இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அரசியல், சமயம், பொருளாதாரம், கலாச்சாரம், மனிதாபிமான விவகாரங்களையும் தாண்டி மேற்கொள்ளப்படுவதாகும். அங்கு இருக்கும் நண்பர்கள் அனைவரும் அரசின் வியூக நண்பர்களாகும். இவ்வாண்டு ஜனவரி தொடங்கி இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சேவை மையத்திற்கான ஒதுக்கீடு .42,000 வெள்ளியில் இருந்து 60,000மாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில கோவிட் சிறப்புக் குழுவில் இணைய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட மேம்பாட்டு நடவடிக்கைச் செயற்குழுவில் மவட்ட அதுகாரி, சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி எதிர்கட்சியினரும் உட்படுத்தப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles