29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தோட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டன

🔥 Views : 6
👁 Reading Now : 43

தாமான் தாசிக் செமினி, தாமான் ஸ்ரீ தஞ்சோங் செமினி ஆகிய இடங்களை சேர்ந்த தோட்ட விவசாயிகளுக்கு காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார மையம் சார்பில் உரங்கள் வழங்கப்பட்டன. இங்குள்ள குடியிருப்பாளர்களின் விவசாய துறையில் மிகப்பெரிய அளவில் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜுனன் கூறினார். இந்த முயற்சியின் வாயிலாக, குடியிருப்பாளர்கள் தங்களது பயிர்களின் மேம்பாட்டை அதிகரிக்க முடியும். விவசாயத்தை நம்பி இருக்கின்ற தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ உஸ்தாத் ஹசான் உட்பட பலரும் விவசாய தோட்டங்களைப் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு 40 உரப்பைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles