28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை! நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ அன்வார் குரல் எழுப்ப வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 31

மலேசியா தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டுமென்று மீரா கட்சியின் தேசிய கே.பி. சாமி கேட்டுக் கொண்டார். மலேசியா பெண்கள் வெளி நாட்டினரை திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக அவருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என தண்டிப்பது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வியை எழுப்பினார். இந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்த மேல் முறையீட்டு மனுவை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று ஜொகூர் சுல்தானும் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கே.பி.சாமி இது தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் அட்டர்னி ஜெனரலிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்போம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles