28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பரிவுமிக்க திட்டத்தின் கீழ் சிலாங்கூர் அரசு ஒரு கோடி வெள்ளி உதவி நிதி

🔥 Views : 8
👁 Reading Now : 40

இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்திற்காக சிலாங்கூர் அரசு ஒரு கோடி வெள்ளிக்கும் மேல் செலவி லவ்ட்டுள்ளது, அத்தொகையில் 99 லட்சத்து 63 ஆயிரத்து 200 வெள்ளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு திட்டத்திற்கும் 7 லட்சத்து 34,000 வெள்ளி மரண சகாய நிதித் திட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாக யாவாஸ் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கான் பெய் நீ கூறினார். இவ்விரு திட்டங்கள் மூலம ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். 99,632 மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்கள் பிறந்த மாதத்தில் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர். இது தவிர, மரணமடைந்த 1,468 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாரிசுகள் மரண சகாய நிதித் திட்டத்தின் மூலம் தலா 500 வெள்ளியை உதவித் தொகையாகப் பெற்றனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles