27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஆப்கான் மக்களை காப்பாற்ற ஐ.நா. 45 மில்லியன் டாலர் நிதியுதவி!

🔥 Views : 6
👁 Reading Now : 21

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியில் உள்ளது. மருத்துவ உதவிப்பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே, சுகாதார அமைப்பு முற்றிலும் சிதைவடைவதைத் தடுக்க 45 மில்லியன் டாலர் அவசர நிதியை ஐ.நா. அறிவித்துள்ளது. பேரழிவைத் தவிர்க்கும் முயற்சியாக, ஆப்கானிஸ்தானில் உயிர்காக்கும் ஆதரவை அதிகரிக்க ஐ.நா.வின் மத்திய அவசரகால நிதியிலிருந்து நிதியை வழங்க மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் முடிவு எடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles