26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சூராவ்வுடன் சுமூகமான முறையில் நாங்கள் தீர்வு காண்போம்’ – தம்பின் கோவில் நிர்வாகம்

🔥 Views : 9
👁 Reading Now : 28
File Picture

சூராவ் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் சூராவ் நிர்வாகத்துடன் நல்ல முறையில் தீர்வு காணப்படும் என்று தம்பின் முருகன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. .தம்பின் தாமான் இண்டா குடியிருப்பாளர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். சுராவ் நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஆலயப் பிரச்சனையைத் தீர்ப்போம் என்று தாமான் இண்டா, ஸ்ரீ முருகன் ஆலயத் தலைவர் எம்.பார்த்திபன் தெரிவித்தார். பள்ளிவாசலுக்கு முன்மொழியப்பட்ட இடத்தில், கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் சூராவ் செயலவை உறுப்பினர்கள் முன்பு ரெப்பா சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு மனுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியத் தரப்புகளில் ஒன்றான இஸ்லாமியப் பாதுகாவலர் அமைப்புகளின் குழு , நெகிரி செம்பிலான் இஸ்லாமிய மத விவகாரத் துறை இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது. அந்நிலத்தில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களைக் கட்ட, மாநில அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் கூறியுள்ளார். இது குறித்து விவாதிக்க கோயில் நிர்வாகம் வரங வெள்ளிக்கிழமை கூடும் என்று பார்த்திபன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles