
கோவிட்-19 நோயாளிகள் வருகைக்கான முன்பதிவின்றி சிலாங்கூரிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களுக்கு செல்லலாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். சிலாங்கூர் போன்ற சில மாநிலங்களில் நேரடியாக மதிப்பீட்டு மையங்களுக்கு செல்வதற்குரிய கட்டத்திற்கு நாம் மாறிவிட்டோம். இனியும் வருகைக்கான முன்பதிவை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் சொன்னார்.
