
எப்போதும் சர்ச்சைகளை உண்டாக்கும் அறிக்கைகளை வெளியிடும் கெடா மந்திரி புசார், முகமட் சனுசி மாட் நோருக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடா மாநில மற்றும் மக்களின் நற்பெயரைக் காக்கும்படி குருண் நாடாளுமன்ற உறுபினர், டத்தொ ஜொஹாரி அப்துல் வலியுறுத்தியுள்ளார். இவர் கெடா மந்திரி புசாராகப் பதவியேற்றதிலிருந்து சர்ச்சைக்குரிய அறிக்கைகள் இதுதான் வெளியிட்டு கொண்டிருக்கிறார். ஒரு மாநில மந்திரி புசார் என்ற முறையில் இவர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது ஒன்றும் உங்களின் சொந்த விவகாரமல்ல, நீங்கள் கெடா மாநில மக்களின் தலைவர். நீங்கள் வெளியிடும் அறிக்கை மக்களுக்கு ஊக்குவிப்பாக, தன்முனைப்பு ஊட்டும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
