
விபத்துக்குள்ளான வேனில் சிக்கித் தவித்த ஓட்டுனரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காப்பாற்றினர்.ஜோர்ஜ்டவுன் ஜெலுத்தோங் ஜாலான் பேராக்கில் பிற்பகல் 1.00 மணியளவில் வேனும்,காரும் மோதி விபத்துக்குள்ளானது.பலத்த காயங்களுடன் கார் ஓட்டுநர் பொதுமக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.28 வயது ஓட்டுநர் முகத்தில் பலத்த காயங்களுடன் பின்னர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்



