26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மகிழ்வுமிகு செயல்வழிக் கற்றல் புத்தாக்கப் போட்டியில் செர்சோனிஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி சாதனை

🔥 Views : 8
👁 Reading Now : 30

தேசிய நிலையிலான மகிழ்வுமிகு செயல்வழிக் கற்றலில் ( National Level Project Based Learning Eureka Innovation Competition ) புத்தாக்கப் போட்டியில் பங்கேற்ற பேரா கிரியான் மாவட்டத்திலுள்ள கோலக்குராவ் செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இவ்வருடம் மலாக்கா மலாய் பெண் மாணவியர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் தர்சன் த/பெ பூவரசன்,அரியரசன் த/பெ கதிரேசன்,சரண்யா த/பெ டிலிப் குமார் ஆகியோர் கணிதப் பாடத்தில் புதிய கற்றல் முறையை கண்டுபிடித்து பிரிவு 3 குழுப்பிரிவில் வெற்றி பெற்றனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களான இவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர் மு.பார்த்திபன் ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளியின் மேலாளர் வாரியம்,பள்ளியின் தலைமையாசிரியர் தமாரியம்மா மற்றும் பெற்றோர்கள் தங்களின் பாராட்டினை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles