27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உதவிக்கரம் நீட்டினார்

🔥 Views : 10
👁 Reading Now : 28

சென்ற மாதம் ஆயிரத்தாவார் சித்தியவான் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவம் நடந்த இடத்திலேயே இளங்கோ மற்றும் அவரின் மனைவி தவச்செல்வி உயிரிழந்தார்கள். இதனால் அவரின் மூன்று பிள்ளைகள் பெற்றோரை பறிகொடுத்தனர். பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு உதவும் வகையில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் அவரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் ஒரு கணிசமான தொகையை மூன்று பிள்ளைகளிடம் வழங்கினார். மேலும் இந்த மூன்று பிள்ளைகளுக்கு மஞ்சோங் மாவட்ட சமூக நல இலாகாவின் மாதமாதம் கிடைக்கக்கூடிய உதவித்தொகையை விண்ணப்பித்து இருப்பதாகவும் அதற்கான பதிலுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார். இது குறித்து விரைவில் ஒரு நல்ல செய்தியை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles