
பாலியல் வழக்கில் கைதான நபருக்கு 6 மாதம் கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமின் வழங்கியுள்ளார். பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார் வயது 20. சலவை தொழில் செய்துவரும் இவர், கிராம பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கஞ ஐந்து மாதம் சிறைவாசம் அனுபவித்த லாலன் குமார், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த, தனது தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து இவருக்கு ஜாமீன் வழங்கிய பீகார் ணநீதிமன்றம் ஆறு மாதங்கள் பெண்களின் துணியை துவைத்து தரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.


