27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்; ஆவணங்கள் இல்லாத அந்நிய பிரஜைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது

🔥 Views : 8
👁 Reading Now : 62

தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளத் தடுப்பூசி மையங்களுக்கு வரும் ஆவணங்கள் இல்லாத அந்நிய பிரஜைகள் மீது குடிநுழைவு துறை இலாகா நடவடிக்கை எடுக்காது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். மலேசியாவில் வசிக்கும் அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்துவதில்தான் சுகாதார அமைச்சு முக்கியத்துவம் கொடுக்கும். இதில் யாரையும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம். இங்கு வசிக்கும் மலேசியர்கள், அந்நியர்கள், ஆவணமற்ற அந்நியர்கள் என அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைச் செலுத்துவோம். அந்த வகையில் தடுப்பூசி மையங்களுக்குத் தடுப்பூசிச் செலுத்த வரும் யார் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles