33.5 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

தாமான் பஞ்சோர் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனைக்கு எப்போது தீர்வு?

🔥 Views : 19
👁 Reading Now : 68

தென் செபராங் பிறை,நிபோங் திபால்,ஜாவி சட்டமன்றத் தொகுதியிலுள்ள தாமான் பஞ்சோர் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் நிலவி வரும் தூய்மைக்கேட்டுப் பிரச்சனைக்கு இதுவரையில் எத்தரப்பும் நடவடிக்கை எடுக்காதது குறித்து ,இங்கு வசிக்கும் குடும்பங்கள் வேதனையடைந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாதது, இண்டா வாட்டர் களவு நீர் வெளியேற்றம் போன்றவற்றால் ஏற்படும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் உள்ளது. இதனால் கொசு தொல்லைகளும் அதிகமாக உள்ளதால், தூய்மைக்கேடு மற்றும் சுகாதார பாதிப்பினால் அவதிப்படுவதாக குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து தொகுதி மக்கள் பிரதிநிதியிடம் தெரிவிக்கப்படும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். மக்களின் துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்போவது யாரென்று இவர்கள் எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles