
12ஆவது மலேசிய திட்டம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தாக்கல் செய்கிறார். 2021 ஆம் முதல் 2025ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய திட்டத்தை காலை 11.30 மணிக்கு பிரதமர் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதார மேம்பாடு, சமூகங்களை பாதுகாப்பது மற்றும் சமூக நல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
