
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்தார். 2021 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரைக்குமான இந்த திட்டத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்காக 40,000 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்தார். நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டு நாட்டை மீண்டும் பொருளாதார மேம்பாட்டு பணிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டி உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மலேசிய குடும்பம் கொள்கைக்கு ஏற்ப 9 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.


