
நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் மீண்டும் பாராட்டினார்.
நேற்று நாட்டில் 13,104 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
வரும் அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இந்த எண்ணிக்கை 10,000 ஆக குறைய வாய்ப்பு இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை பாராட்டினேன்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார அமைச்சு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அந்த வகையில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருவதால் சுகாதார அமைச்சரை மீண்டும் பாராட்டுவதாக லிம் கிட் சியாங் சுட்டிக்காட்டினார்.



