27.9 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

நம்ம ஊரு சூப்பர் சிங்கர் பாடல் போட்டி சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

🔥 Views : 11
👁 Reading Now : 67

இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் நம்ம ஊரு சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டி இணையதளம் மூலமாக நடத்தப்பட்டது. அனைத்துலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான Lockup நாதன் (மென்டராக) இந்த போட்டியை முழுமையாக வழிநடத்தினார். காலிறுதிச் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றுவரைக்கும் முன்னோடி பாடகர் பாடகியான வி.ஜெயந்தி மற்றும் மணிவண்ணன் தலைமை நீதிபதிகளாக இணைந்து இப்போட்டியின் மேலும் மெருக்கூட்டினார்கள். சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த போட்டியில் கலந்துக்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1,2ஆம் தேதிகளில் நம்ம ஊரு சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றில் 34 போட்டியாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாடல் பதிவு (Single Album) உருவாக்கி, வானம் ஒ.டி.டி சேனலில் ஒளிப்பரப்படும். நம் ஒளிப்பரப்பு துறையில் முதல் முறையாக இறுதிச்சுற்றில் முழுமையாக நம் மண்ணின் மைந்தர்களின் பாடலை பாடி கலக்கவிருக்கிறார்கள். இப்போட்டியை நம்ம ஊரு சூப்பர் சிங்கர் எனும் முகநூல் (facebook) அகப்பக்கத்தில் காணலாம். இந்த போட்டியில் வெற்றிப்பெறுபவர்கள் நம்ம ஊரு சூப்பர் சிங்கர் 2022 மலேசியாவை பிரதிநிதித்து போட்டியிடுவார்கள். இந்த அனைத்துலக போட்டியில் சிங்கப்பூர், கனடா, ஶ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா கலந்துக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles