
வரும் பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியுடன் அம்னோ கைகோர்க்காது. பெர்சத்துவுடன் இணைந்து அம்னோ பணியாற்றும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இனியும் நேரத்தை வீணடிக்க கூடாது. பெர்சத்துவுடன் நேரடியாக மோதுவதற்கு நாங்கள் தயார் ஆகி விட்டோம் என்று அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான தத்துவம் முஸ்தாபா யாக்கோபு தெரிவித்தார். முன் நோக்கி செல்வதற்கு தயாராக இருக்கும்படி அம்னோவினரை கேட்டுக்கொண்ட அவர் வெற்றி மட்டுமே முக்கியம் என்றார் அவர்.
